திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரக் கடைகள், ஜூஸ் கடைகள், டிபன் கடைகள், இளநீர் கடை போன்ற கடைகளை அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்க கூடாது என்று வியாபாரிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
