கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.18 லட்சம்
உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக இந்த கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 18 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இது தவிர இந்த கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியலை மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் நிரந்தர உண்டியல்கள் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பின்னர் நேற்று 18 நிரந்தர உண்டியல்களும் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டன. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ப.ஆனந்தன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ச.ஆனந்த், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உண்டியல்களில் ரூ.17 லட்சத்து 92 ஆயிரத்து 712 ரொக்கமும், 3 கிராம் தங்கமும், 30 கிராம் வெள்ளியும் இருந்தன. இதுதவிர மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
