நண்பர்களுடன் மதுகுடித்த 9-ம் வகுப்பு மாணவன்.. தந்தைக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு
சிக்கமகளூரு, கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா மெல்லால் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் சரண்(வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சரண் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியே விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றான். ஆனால் சிறுவனின் நண்பர்கள் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற சரணும் மது குடித்தான். இதையடுத்து தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என சரண் பயந்துள்ளான். இதனால் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளான். பின்னர், பயத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, விஷம் குடித்தான். இந்நிலையில், இரவு நீண்ட நேரம் ஆகியும் சரண் வீட்டுக்கு திரும்பாததால், பயந்துபோன அவனது பெற்றோர் அவனை அப்பகுதி முழுவதும் தேடினர். இதில், அப்பகுதியில் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்திருந்த சரணை அவனது பெற்றோர் பாா்த்துள்ளனர். பின்னர், அவனிடம் ஏன் வீட்டுக்கு வரவில்லை என அவரது தந்தை கேட்டுள்ளார். அப்போது சரண், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாகவும், அதனால் உங்களுக்கு (தந்தை) தெரிந்தால் திட்டுவீர்கள் என பயந்து வீட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளான். மேலும், பயத்தினால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துவிட்டேன் என்றும் சரண் கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
