ராஜமவுலி படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா!
சென்னை, எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக "எஸ்எஸ்எம்பி 29" என்று பெரியடப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் வில்லன் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இப்படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.The woman who redefined Indian Cinema on the global stage. Welcome back, Desi Girl! @priyankachopra Can’t wait for the world to witness your myriad shades of MANDAKINI.#GlobeTrotter pic.twitter.com/br4APC6Tb1




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
