டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
ஸ்ரீநகர், நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைக்காக 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதற்கு மேலான பதவிகளில் உள்ள அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த குழு செயல்பட இருக்கிறது. இந்த சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்னதாக காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமதுவுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவ்வழக்கில் தேடப்பட்டு வந்த காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வாடகை வீட்டில் 360 கிலோ வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவர் பரிதாபாத்தில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரைப்போல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மேலும் ஒரு டாக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கும்பலை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இளைஞர்களை அடையாளம் கண்டு மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததும், நிதி திரட்டியதும், ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும்,வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கும்பலுக்கு உதவிய மவுலவி இஷ்தியாக் என்பவர் பிடிபட்டார். இவர் அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்தவர். காஷ்மீர் போலீசாரும், அரியானா போலீசாரும் இணைந்து நடத்திய தொடர் வேட்டையில் அவர் சிக்கினார். அவர் பயங்கரவாத தொடர்புக்கு மையப்புள்ளியாக திகழ்ந்த அல் பலாஹ் பல்கலைக்கழக வளாகத்தில் மத போதனைகள் நிகழ்ச்சி நடத்தி வந்தார். இவரது வாடகை வீட்டில்தான் 2,500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை டாக்டர் முசாமிலும், டெல்லி கார் வெடிப்புக்கு முக்கிய காரணமான டாக்டர் உமரும் பதுக்கி வைத்திருந்தனர். அதற்கு மவுலவி இஷ்தியாக் உதவி செய்ததாக தெரியவந்துள்ளது. எனவே, அவரை விசாரணைக்காக ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவ்வழக்கில் பிடிபட்ட 9-வது நபர் இவர் ஆவார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
