"சென்னைக்கு வந்தும் கஷ்டப்படுவது என்பது தண்டனை என்பேன்"- சந்தோஷ் நாராயணன்
சென்னை, தேவ், கே.வி.துரை தயாரித்து கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘‘நான் ‘மிடில் கிளாஸ்'-ஐ விட தரைமட்டமாக இருந்தவன். ஒருமுறை பெங்களூருவுக்கு ஒரு வேலை விஷயமாக செல்லவேண்டியிருந்தது. ரூ.5 ஆயிரம் தருவதாக சொன்னதால், கையில் இருந்த சில்லரைகளை மட்டும் பொறுக்கிக்கொண்டு பெங்களூரு சென்றேன். விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு குலுக்கலில் டி.வி.யை பரிசாகப் பெற்றேன். அதற்கு வரி ரூ.300 கட்ட சொன்னார்கள். என்னிடம் ரூ.150 தான் இருந்தது. அதை அதிகாரிகளிடம் கொடுத்து, மீதத்தை அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் கடைசி வரை அந்த டி.வி. வரவில்லை. சென்னைக்கு வந்தும் கஷ்டப்படுவது என்பது, நமக்கு நாமே வேண்டுமென்றே கொடுக்கும் தண்டனை என்பேன். முயற்சி எனும் தூண்டிலை வீசிக்கொண்டே இருக்கவேண்டும். நிச்சயம், என்றாவது பலன் கிடைக்கும். சென்னை ஒரு வங்கி மாதிரி. கொஞ்சம் கொஞ்சமாக லோன் வாங்கிக்கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்'', என்றார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
