தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்

  தினத்தந்தி
தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்

நகரி, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், நடிகை மஞ்சு விஜயலட்சுமி உள்பட 29 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக ஆஜராக போலீசார் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி அவர் நேற்று ஐதராபாத்தில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரபடுத்தியது தொடர்பாக போலீசார் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் வெளியே வந்த பிரகாஷ் ராஜ் கூறுகையில், ‘2016-ம் ஆண்டு ஒரு சூதாட்ட செயலிக்காக பிரமோஷன் செய்தேன். அந்த செயலி 2017-ம் ஆண்டு சூதாட்ட செயலியாக மாறியது. இதையடுத்து எனது ஒப்பந்தத்தை நான் ரத்து செய்துவிட்டேன். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

மூலக்கதை