ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர்
பாரிஸ்,2007ம் ஆண்டு முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக செயல்பட்டவர் நிகோலஸ் சர்கோஸி (வயது 70). இவர் அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக லிபியா முன்னாள் அதிபர் கடாபியிடம் நிதி உதவி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 3 மாதங்களுக்குமுன் தீர்ப்பு வெளியானது. அதில், நிகோலஸ் சார்கோஸி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நிகோலஸ் சர்கோஸி கடந்த மாதம் 21ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து , ஜாமீன் வழங்கக்கோரி நிகோலஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு பாரிஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நிகோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 3 வாரங்கள் லா சாண்டி சிறையில் இருந்த நிகோலஸ் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான உடன் அவர் வீடு திரும்பினார்




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
