நோயாளி போல் அறிமுகமான சைபர் மோசடி கும்பல்: ரூ. 2.50 லட்சம் இழந்த டாக்டர்
லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்ட்டம் ஷாபூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஜிஜேந்திர குமார். இவர் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். மேலும், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஜிஜேந்திர குமாரை ஒரு நபர் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனை வேண்டுமென அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, மருத்துவ ஆலோசனை வழங்கிய டாக்டர் ஜிஜேந்திர குமார் ஆலோசனைக்கான பணம் வழங்குமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்து பணம் அனுப்ப ஜிபே கியூ ஆர் கோர்டை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு அந்த நபர் கூறியுள்ளார். டாக்டரும் தனது வங்கி கணக்கிற்கான கியூ ஆர் கோர்ட்டை அனுப்பியுள்ளார். கியூ ஆர் கோர்டு அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் டாக்டர் ஜிஜேந்திர குமாரின் வங்கி கணக்கில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக டாக்டருக்கு செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டாக்டர், தான் சைபர் மோசடி கும்பல் வலையில் சிக்கியது, நோயாளிபோல் நடித்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சம் பணத்தை அந்த கும்பல் எடுத்ததையும் அவர் உணர்ந்தார். உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 2.50 லட்சத்தை கொள்ளையடித்த சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
