கனடா மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ஒண்டாரியா, ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது கனடா வெளியுறவுத்துறை மந்திரி அனிதா ஆனந்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் நடத்தப்பட்ட கார் வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். மேலும், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் கனடா துணை நிற்பதாக கூறினார். தொடர்ந்து, இரு நாடுகளிடையே எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக, இந்தியா - கனடா இடையேயான சட்ட அமலாக்க ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிதா ஆனந்த் இந்தியாவுக்கு பயணம் செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெய்சங்கரின் கனடா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அனிதா ஆனந்த் எக்ஸ் தளபதிவில், "வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளிடையே உள்ள உறவுகளில் ஒத்துழைப்பு" குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
