மீண்டும் சிறப்புப் பாடலில் நடனமாடும் தமன்னா...எந்த படத்தில் தெரியுமா?

  தினத்தந்தி
மீண்டும் சிறப்புப் பாடலில் நடனமாடும் தமன்னா...எந்த படத்தில் தெரியுமா?

சென்னை,சிரஞ்சீவி அடுத்ததாக மன சங்கர வரபிரசாத் கரு என்ற படத்தில் நடித்து வருகிறார். அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான மீசாலா பில்லா 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறப்புப் பாடலில் தமன்னா நடனமாடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தமன்னா இதற்கு முன் அனில் ரவிபுடியின் 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடினமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய பதாகைகளின் கீழ் சாஹு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்திற்கு பீம்ஸ் செசிரோலியா இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை