ஆலியா பட்டின் “ஆல்பா” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
மும்பை, பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் . 'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் ஆலியா பட். இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி புதிய கதாபாத்திரம் ஒன்றை யுனிவர்ஸ் படங்களில் அறிமுகம் செய்கிறது. ‘ஆல்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஷிவ் ராவில் இயக்கி வருகிறார். முதலில் டிசம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யுனிவர்ஸ் படங்களில் கடைசியாக வெளியான ‘வார் 2’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ‘ஆல்பா’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. தற்போது டிசம்பர் வெளியீடு அல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இன்னும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிவடையவில்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் அலியா பட் உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
