டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

  தினத்தந்தி
டிடிஎப் வாசனின் “ஐபிஎல்” படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

சென்னை, பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ‘ஐபிஎல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலானது. டிடிஎப் வாசன் நடித்துள்ள ‘ஐபிஎல்’ படத்திலிருந்து ‘அப்போ இப்போ’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அஸ்வின் விநாயகமூர்த்தி பாடியுள்ளார். பாடல் வரிகளை கானா ருத்ரா எழுதியுள்ளார். இந்நிலையில், ‘ஐபிஎல்’ படத்திலிருந்து ‘யாவாலோ’ பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.The feels are real! ❤️‍ Catch the **“Yaavalo”** song promo from #IPL – Indian Penal Law now and get lost in the vibe! ⚖️ Full song dropping soon… stay tuned! #Yaavalo #IPLMovie #TamilCinema #RomanticTrack #actorkishore @abhiramiact #TTFVasan @kushithakallapu pic.twitter.com/Q3UnUZHhee

மூலக்கதை