கதைக்கு தேவைப்படும் என்பதால், இந்த முடிவெடுத்தேன்- விஷ்ணு விஷால்
சென்னை, கே.பிரவீண் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் நடித்த ‘ஆர்யன்' படம், கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலிடம், ‘படத்தில் உங்களை விட செல்வராகவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே... அவரது டைரக்ஷனில் நடிக்க திட்டமா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘‘கதைக்கு தேவைப்பட்டது என்பதால், என் கதாபாத்திரத்தை அவர் மீறினாலும் சரி என்று முடிவெடுத்தேன். வழக்கமாக படத்தின் முக்கிய காட்சிகளில் ஹீரோ தான் நிறைந்திருப்பார். அந்த ஹீரோயிசத்தை உடைக்கவே இந்த முயற்சி. எனக்கு கதை தான் முக்கியம். நான் தான் எல்லா காட்சிகளில் நிறைந்திருக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை, நினைக்கவும் மாட்டேன். அதேவேளை செல்வராகவன் டைரக்ஷனில் நடிக்கவேண்டும் என்பது எல்லோரைப்போல எனக்கும் ஆசைதான்'', என்றார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
