தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்

  தினத்தந்தி
தேசிய திரைப்பட விருதுக் குழுவை விளாசிய நடிகர் பிரகாஷ்ராஜ்

2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மம்முட்டி பெறவுள்ள 7-வது மாநில விருதாகும். அதனை தொடர்ந்து மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் , சிறந்த திரைக்கதை என்ற பிரிவுகளின் கீழ் 9 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "பிரம்மயுகம் படத்தில் மம்முட்டி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகர்கள் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார். இதனிடையே, தேசிய விருதில் மம்மூட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், "இது தொண்டு நிறுவனம் கிடையாது. நாம் திறமையான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு விருது அளிக்கிறோம். ஆனால் FILES, PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும்போதே நமக்குத் தெரிகிறது, அவை நடுநிலையுடன் அறிவிக்கப் படுவதில்லை. மம்முட்டிக்கு விருது கொடுக்கும் அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை