’என்சி24’ - மீனாட்சி சவுத்ரியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

  தினத்தந்தி
’என்சி24’  மீனாட்சி சவுத்ரியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,நாக சைதன்யா, இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு கூட்டணியில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ’என்சி24’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். மீனாட்சியின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது, ஆனால் தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் நடந்த விபத்து காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மீனாட்சி சவுத்ரியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அவர் ’தக்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ’என்சி24’ படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் பி. லோக்நாத் இசையமைக்கிறார்.Super excited to be a part of this team and to Be playing ‘DAKSHA’ . Get ready for a an exciting journey https://t.co/NsfGkrI71X

மூலக்கதை