மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதில்
சென்னை, எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் பி.எச்.பாண்டி யன். இவருடைய மகன் மனோஜ் பாண்டியன்.அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராக பதவி வகித்து வந்த மனோஜ் பாண்டியன் கட்சி சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பிளவு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் பிரிந்த போது, அவரது அணியில் மனோஜ் பாண்டியன் இணைந்து தீவிர ஆதரவாளராக செயலாற்றி வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுத்து மனோஜ் பாண்டியன் வாதாடி வந்தார். இதற்கிடையே சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் கை கோர்த்ததால் மனோஜ் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு பிடிக்காமல் விலகி இருந்தார். இந்நிலையில் மனோஜ் பாண்டியன், தி.மு.க.வில் இணையப்போவதாக நேற்று காலை அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி அவர் நேற்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவரை அமைச்சர் சேகர்பாபு தனது காரில் அழைத்து வந்திருந்தார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவரது முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். திமுகவில் இணைந்த கையோடு தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். மனோஜ் பாண்டியன் திமுகவி இணைந்தது குறித்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், “ எல்லாம் நன்மைக்கே’ என்று பதிலளித்தார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
