விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

  தினத்தந்தி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்  தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா, பீகாரில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல் நடை பெறுகிறது . 121 தொகுதிக ளுக்கு இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜனதா கூட்டணி ஏற்கனவே பெண்களுக்கான உதவித் தொகையை அறிவித்து இருந்தது. பெண்கள் உதவித் தொகை என்று கூறி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு 'பிரதான் மந்திரி ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரத்தை நிதீஷ் குமார் அரசு வரவு வைத்திருக்கிறது. எதிர்க்கட்சியான ராஷ்டி ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு போட்டியாக பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30 ஆயிரம் வழங்கப் படும் என்று ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முதல் -மந்திரி வேட்பாளரு மான தேஜஸ்வி யாதவ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு மகர சங்க ராந்தியான ஜனவரி 14. யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் வழங்குவோம்.அதோடு விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். விவசாயிகளுக்கு பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். அனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள் (பி.ஏ.சி.எஸ்.), முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் களுக்கும் மாநி லத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். கடைசி கட்டத்தில் அவர் வாக்குறுதி களை அள்ளி வீசி வருகிறார்.

மூலக்கதை