வெளிநாட்டு காதலனால் ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்: பணம் பறிப்பு முயற்சி முறியடிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென் பகுதி இலங்கை சேர்ந்த 25 வயது பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த பல்கலைக்கழக மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் இளம் பெண்ணிடம் இருந்து சுமார் 1 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த போது மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் விசாரணையை தொடங்கிய பொலிஸாரிடம், தனக்கு தெரிந்த பிரேசில் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்ற முயன்றதாக கைது செய்யப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளான்.அந்த பிரேசிலிய நபருடன் சம்பந்தப்பட்ட பெண் கடந்த 4 மாதங்களாக டெலிகிராம் செயலி மூலம் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து நெருங்கி பழகிய நிலையில், அவரது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டி பணம் கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக மாணவரிடம் அந்த பணத்தை கொடுக்குமாறும் பிரேசில் நாட்டை சேர்ந்த நபர் மிரட்டியுள்ளார், இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கொடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
