யாழ். ஏழாலையில் ஆணொருவருக்கு கத்திக்குத்து: நெருங்கிய உறவினர் செய்த பயங்கரம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழ். ஏழாலையில் ஆணொருவருக்கு கத்திக்குத்து: நெருங்கிய உறவினர் செய்த பயங்கரம்  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் யாழ். ஏழாலை மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் கத்திக்குத்து சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவமானது நேற்றிரவு(04.10.2025) நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவரின் மச்சான் உறவு முறையை சேர்ந்தவரே இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை சுன்னாகம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சுன்னாகம் பொலிஸார் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை