தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரி மற்றும் அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) என்சிசி பிரிவு, அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் இணைந்து நடத்திய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக புனித பனிமய அன்னை ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் ஜெஸிஸி பெர்னாண்டோ நடத்தி வைத்து, மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்று ஊக்கமளித்தார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் சிறப்புரையாற்றி, மாணவர்களும் பொதுமக்களும் ஆரோக்கியமும் நற்பண்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விழிப்புணர்வு பேரணியில் தூய மரியன்னை கல்லூரி என்சிசி, NCC LL, AICUF, NSS, YRC, RRC, Anti-Drug Forum போன்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அலோசியஸ் பெண்கள் மணி நொடி பள்ளி, புனித சேவியர் பள்ளி என்சிசி பிரிவுகளும் பங்கேற்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
