கச்சா எண்ணைய் விலையில் இந்தியாவுக்கு மேலும் சலுகை; ரஷியா முடிவு
மாஸ்கோ,ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது.ஏற்கனவே இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் தள்ளுபடி சலுகையை ரஷ்யா அளித்து வருகிறது. ஜூலை மாதம் பீப்பாய்க்கு ஒரு அமெரிக்க டாலரும், கடந்த வாரம் 2.50 அமெரிக்க டாலரும் தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணை விலையில் மேலும் தள்ளுபடியை ரஷ்யா அளித்து உள்ளது. அமெரிக்க வரிகளின் சுமையை இந்தியா எதிர்கொண்டு வருவதால், ரஷ்ய எண்ணையின் விலையில் இந்தியாவுக்கு ஒரு பீப்பாய்க்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர்கள் வரை குறைத்துள்ளது. செப்டம்பர் பிற்பகுதியிலும், அக்டோபர் மாதத்திலும் ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யாவின் யூரல் தரத்திலான கச்சா எண்ணை குறைந்த விலையில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்து உள்ளது. 5 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் மூன்று எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. இதற்கிடையே ரஷ்ய ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப தலைவர் டிமிட்ரி ஷூகாயேவ் கூறும் போது, எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. தற்போது புதிய வினியோகங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார். எஸ்-400 வான் பாதுகாப்பு கவச அமைப்புக்கு இந்தியா சுதர்சன சக்கரம் என்று பெயர் சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
