உயிர் போகும் நிலையில் இருந்த மாணவி; மெட்டாவின் அலெர்ட்டால் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்
லக்னோ , உத்தர பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் அலர்ட்டால் காப்பாற்றப்பட்டுள்ளார் . உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளைஞர் திடீரென தொடர்பைத் துண்டித்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மாணவியின் தற்கொலை குறிப்பு குறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்துள்ளது .மெட்டா நிறுவனம் அலர்ட் செய்ததன்பேரில் போலீசார் 16 நிமிடத்தில் அந்த மாணவியின் இருப்பிடத்திற்கு சென்று, பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனால் தற்போது மாணவி உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்கொலை தொடர்பான பதிவு செய்யப்பட்டால் அது குறித்த அலர்ட்டை பெறுவதற்காக 2022 முதல் மெட்டாவுடன் உத்தரப் பிரதேச காவல்துறை ஒரு ஏற்பாட்டை கொண்டுள்ளது. இந்த ஏற்பாட்டால் ஜனவரி 2023 முதல் மாநிலத்தில் 1,315 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
