பூட்டு, லாக்கரை உடைக்காமல்... பிரபல வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் திருட்டு; 5 பேர் கும்பல் கைவரிசை
உஜ்ஜைன்,மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மகாநந்த நகர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வங்கி கிளையின் லாக்கரில் இருந்த நகை, பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. அவற்றில் ரூ.5 கோடி நகை, ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சி.சி.டி.வி. பதிவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 2 திருடர்கள் சுவர் ஏறி குதித்து, மேல் தளத்திற்கு ஏறி சென்று, பூட்டை திறந்து வங்கிக்குள் சென்றனர். அவர்கள் லாக்கரை திறந்து உள்ளே இருந்தவற்றை எடுத்து சென்றுள்ளனர். வங்கியின் பூட்டு, லாக்கரை உடைக்காமல் நகை, பணம் திருடப்பட்டு இருந்ததில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், வங்கி ஊழியர் ஒருவரால் இது நடந்திருக்க கூடும் என்ற அடிப்படையில் விசாரணை தொடர்ந்தது. அவருக்கு வங்கி கொள்ளையில் தொடர்பு இருக்கும் என சந்தேகத்தினர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு பிரதீப் கூறும்போது, பொதுமக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சென்றுள்ளனர். அப்படி அடகு வைத்த நகைகளை, வங்கியின் ஒப்பந்த ஊழியரான ஜெய் பவ்சார், கூட்டாளிகள் 4 பேருடன் திட்டம் தீட்டி திருடியது தெரிய வந்தது என்றார். அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்த நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டன. அலட்சியத்துடன் செயல்பட்ட வங்கி மேலாளர் மற்றும் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
