வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்கள்; சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடெல்லி, இந்தியாவின் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இமாசல பிரதேசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. சுமார் ஆயிரம் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.சிம்லாவில் தொடர் மழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. பஞ்சாப் மாநிலத்தில் 1988-க்கு பிறகு இந்த ஆண்டு அதிக கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சட்லெஜ் மற்றும் ரவி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலங்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பஞ்சாப்பில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
