துபாய், மதுரை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
துபாய், ஐக்கிய அரசு அமீரகத்தின் துபாயில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை உள்ளது. இந்நிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு இன்று காலை 5 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படவிருந்தது. ஆனால், விமானம் புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டது. கால தாமதத்திற்கான காரணத்தை ஸ்பைஸ்ஜெட் விமான அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால், துபாய் விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக, பட்ஜெட் விமான சேவை என்பதால் பயணிகளுக்கு முறையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பெண்களும், முதியோர்களும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக சிரமம் அடைந்தனர். பின்னர், 10 மணிநேர தாமதத்திற்குப்பின் மாலை 3 மணிக்கு துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. 10 மணிநேரத்திற்குமேல் தாமதமாக புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மீது இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தினர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
