கோடியில் சொத்து, குடிசை தான் வீடு: மது, புகையிலை, சினிமாவுக்குத் தடை

  தமிழ் முரசு
கோடியில் சொத்து, குடிசை தான் வீடு: மது, புகையிலை, சினிமாவுக்குத் தடை

புதுக்கோட்டை: தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஊரல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலை சிற்றூர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.இங்கு வசிக்கும் அனைவரும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் கோடீஸ்வர குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்த சிற்றூரில் மது, சூது, புகையிலைப் பொருள்கள், தொலைக்காட்சி, திரை அரங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் குடிசை வீடுகளில்தான் வசிக்கின்றனர். யாரும் மின் விளக்குகள் பயன்படுத்துவதில்லை. மின்சாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு மண்ணெண்ணெய், சூரிய ஒளி விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எந்தவிதமான மத பண்டிகைகளையும் கொண்டாடாமல் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை மட்டுமே மெய்வழி சிற்றூர் மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இங்குள்ள மக்கள் உருவ வழிபாட்டில் ஈடுபடுவதில்லை என்றாலும், சாலையாண்டவர் என்பவரை தெய்வமாக வணங்குகின்றனர். மதுரையைச் சேர்ந்த அவரது இயற்பெயர் காதர் பாட்ஷா என்றும், 131 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மெய்வழி கோட்பாட்டை தோற்றுவித்ததும் இவர்தான். இவரது சமாதியை மெய்வழி சிற்றூர் மக்கள் நாள்தோறும் வணங்குகிறார்கள்.

மூலக்கதை