நடிகை ஆலியா பட்டிற்கு எஸ்.எஸ்.ராஜமவுலி கூறிய அறிவுரை...!

  தினத்தந்தி
நடிகை ஆலியா பட்டிற்கு எஸ்.எஸ்.ராஜமவுலி கூறிய அறிவுரை...!

சென்னை, பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலியா பட் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் 'ஆர்ட் ஆப் ஸ்டோன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவருகிறார்.இவர் தற்போது வாசன் பாலா இயக்கத்தில் 'ஜிக்ரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. இது ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஜிக்ரா படம் வருகிற 11-ம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆலியா பட் அதிரடியான சண்டைக்காட்சிகளில் நடிப்பது பற்றி பேசினார். அதில் ஒருமுறை ராஜமவுலி சார் என்னிடம், 'சண்டைக் காட்சிகள் என்பது படத்தின் சுவர்களும் தூண்களுமாக இருக்கலாம். ஆனால், படத்தின் அடித்தளமான உணர்ச்சிகள் வலுவாக இல்லாவிட்டால் கட்டடம் இடிந்துவிழும்' எனக் கூறினார். இதுதான் 'ஜிக்ரா' படத்தை நான் தேர்வு செய்ய ஒரு முக்கியமான காரணம் ஆகும்.இதற்கிடையில் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஜிக்ரா படத்தின் டிரெய்லரை பார்த்து "ஆலியா எப்போதும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் நம்மை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்துவதில்லை" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை