நடிகர் பிரபு நடிக்கும் 'ராஜபுத்திரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சென்னை,இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபு. மேலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிரபு, 'ராஜபுத்திரன்' எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றிக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை மகா கந்தன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆலிவர் டெனி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஐஸ் நவ்பால் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார்.கிராமத்துக் கலைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.Launching the First look of #Rajaputhiran, Best wishes to #Prabhu sir, @act_vetri and the entire team!@crescine24 @safi2409@KotharshaK @ayesha10035 @mahaakandh17603@OliverDeny411 @muthu_sm52655 @mohammed_rafi29@vasheer71 @PRasuldeen@rockyaug22 @act_vetri@krishnapriya829… pic.twitter.com/wD7bfpJNOa