25 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்

  தினத்தந்தி
25 மில்லியன் பார்வைகளை கடந்த கோல்டன் ஸ்பாரோ பாடல்

சென்னை, தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்தநிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கோல்டன் ஸ்பாரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் புது வைப் செய்யும் விதமாக அமைந்துள்ளது.தற்போது இந்த பாடல் வெளியாகி சுமார் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது குறித்த பதிவை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். #GoldenSparrow hits 25 million … the first single is a hit . 3 more super songs on ur way …. Thanks to my director @dhanushkraja and my team #NEEK @thesreyas pic.twitter.com/7xASuRAMZm

மூலக்கதை