சீனா ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்

  தினத்தந்தி
சீனா ஓபன் டென்னிஸ்; மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ்

பீஜிங்,சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர்.இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) அல்லது யுஞ்சோகெட் பு (சீனா) ஆகியோரில் ஒருவருடன் மோதுவார்.

மூலக்கதை