வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடக்கம்

  தினத்தந்தி
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடக்கம்

சென்னை:பிரசித்தி பெற்ற வடபழனி முருகள் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்கி 12-ம் தேதி வரை 10 நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பு அம்சமாக "சக்தி கொலு" எனும் பெயரில் பிரமாண்ட கொலு இடம்பெறுகிறது. பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி 5 முதல் இரவு 9மணி வரையிலும் கொலுவை பார்வையிடலாம். காலை மற்றும் மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் தினசரி கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.4-ம் தேதி லலிதா சகஸ்ரநாம பாராணமும் இதைத்தொடர்ந்து 6-ம் தேதி மாலை திருமுறை பாராணயமும் நடக்கிறது. 11-ம் தேதி காலை மற்றும் மாலையில் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.12-ம் தேதி விஜய தசமி அன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் கை விரல் பிடித்து தொடக்க சுல்வியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மூலக்கதை