அமெரிக்காவுக்குள் 125,000 அகதிகளை அனுமதிக்க பைடன் திட்டம்

  தமிழ் முரசு
அமெரிக்காவுக்குள் 125,000 அகதிகளை அனுமதிக்க பைடன் திட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு தமது நாட்டிற்குள் 125,000 அகதிகளை அனுமதிக்க இலக்கு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.திங்கட்கிழமை (செப்டம்பர் 30), அமெரிக்க உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அகதிகள் குறித்த தகவல் இடம்பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அகதிகள் அனுமதி திட்டத்தின் மூலம் 100,000 பேரை நாட்டிற்குள் கொண்டுவர பைடன் நிர்வாகம் வேலை செய்தது. இந்த நிதியாண்டு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதிபர் பைடன் திட்டமிட்டது போல் 100,000க்கும் அதிகமான அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டால் 30 ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும். 125,000 அகதிகள் என்பது மனிதாபிமான அக்கறைகளால் நியாயப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, மேலும் அதில் தேசிய நலனும் உள்ளது என்று பைடனின் சுற்றறிக்கையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

மூலக்கதை