ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஜனநாயக திருவிழாவை வெற்றி பெற செய்யுங்கள் - பிரதமர் மோடி
புதுடெல்லி,ஜம்மு காஷ்மீரின் 40 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், " ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இன்று 3 வது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் திருவிழாவை சிறப்பாக நடத்த வாக்காளர்கள் அனைவரும் முன் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதன்முறையாக வாக்களிக்க போகும் இளம் நண்பர்களைத் தவிர, பெண் சக்திகளும் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.