டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள்: தென் ஆப்பிரிக்காவின் சாதனையை முறியடித்த இந்தியா
கான்பூர்,வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி கடந்த 27ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது. வங்காளதேசத்திற்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்கு தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) அணிகள் உள்ளன. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியல்:ஆஸ்திரேலியா - 414 வெற்றிஇங்கிலாந்து - 397 வெற்றிவெஸ்ட் இண்டீஸ் - 183 வெற்றிஇந்தியா - 180 வெற்றிதென் ஆப்பிரிக்கா - 179 வெற்றி




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
