டெஸ்ட் கிரிக்கெட்: முத்தையா முரளிதரனின் மாபெரும் சாதனையை சமன் செய்த அஸ்வின்

  தினத்தந்தி
டெஸ்ட் கிரிக்கெட்: முத்தையா முரளிதரனின் மாபெரும் சாதனையை சமன் செய்த அஸ்வின்

கான்பூர்,இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.மழை தொடர்ந்து பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று 4வது ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. அதிரடியாக ஆடிய இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்திருந்த போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.இதையடுத்து இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. வங்காளதேசத்திற்கு எதிரான 2வது ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது ஜெய்ஸ்வாலுக்கும், இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனின் மாபெரும் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் (11 முறை *) முதல் இடத்தில் உள்ள முத்தையா முரளிதரனை (11 முறை) சமன் செய்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல்;முத்தையா முரளிதரன் - 11 முறைரவிச்சந்திரன் அஸ்வின் - 11 முறைஜாக் காலிஸ் - 9 முறை

மூலக்கதை