'கடினமான நேரத்திலும் உறுதியாக போராடுபவர் ரஜினிகாந்த்' - செல்வப்பெருந்தகை
சென்னை,நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-"உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர். அவர் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். "இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் திரு ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர்.திரு ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம்…