பொதுத் தேர்தல் 2024: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்த முக்கிய அறிவிப்பு! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
பொதுத் தேர்தல் 2024: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்த முக்கிய அறிவிப்பு!  லங்காசிறி நியூஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும்.தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் பிரிவுகளுக்கும் 2024 வாக்காளர் பட்டியல் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, அனைத்து மாவட்ட செயலகங்கள், அனைத்து பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர் அலுவலகங்கள் மற்றும் சில தெரிவு செய்யப்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளது.அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் இடங்களிலிருந்தும், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இருந்தும் இலவசமாகப் பெறலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அக்டோபர் 08ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

மூலக்கதை