செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
![செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்](https://static1.tamilmurasu.com.sg/s3fs-public/articles/2024/10/01/Screenshot202024-10-0120153653.jpg?VersionId=DQRZOWyqyAL9aOXB3lNBc.8kKDmLzw9U)
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92,77,697 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.அதன் தொடர்பில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, செயல்திறன்மிக்க, நம்பகமான பயண வசதியை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எப்போதுமே முயற்சி செய்துவந்துள்ளது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.அதிகபட்சமாக செப்டம்பர் 6ஆம் தேதியன்று, 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு விரைவுத் தகவல் குறியீடு (கியூஆர் கோடு) பயணச்சீட்டு, பயண அட்டைகள் உள்ளிட்ட அனைத்து வகை பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் நுழைவுச்சீட்டு, ‘பேடிஎம்’ செயலி ஆகியவற்றின் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில், மெட்ரோ ரயில்களையும் ரயில் நிலையங்களையும் பராமரிப்பதில் அதிக ஒத்துழைப்பு கொடுத்துவரும் அனைத்துப் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
மூலக்கதை
![](https://www.tamilmithran.com/img/apple_icon.png)