ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு - மூடப்பட்டிருந்த இரு வீதிகள் திறப்பு! - லங்காசிறி நியூஸ்
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் வீதித் தடைகள் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் உயர் பாதுகாப்பு வலயமாக வகைப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், ஜனாதிபதி திஸாநாயக்கவின் நியமனத்துடன் அனைத்து வீதித் தடைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி நாளை (28) முதல் சர் பரோன் ஜயதிலக்க மாவத்தை (Sir Baron Jayathilaka Mawatha) மற்றும் ஜனாதிபதி மாவத்தை (Janadhipathi Mawatha) பொதுமக்கள் பார்வையிட முடியும்.