அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி பதவியேற்றுள்ள இந்சூழ்நிலையில் தற்போது அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கேள்வி, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது தான். இலங்கை அரசியலை பொறுத்தளவில் இவர்களுடைய குடும்பம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்து வந்தது. முக்கியமாக இவர்கள் குடும்ப அரசியல் தொடர்பான விமர்சனங்களை அதிகம் சந்தித்து வந்தனர். அந்தவகையில் டான் ஆல்வின் ராஜபக்ச தான் SLFP கட்சியில் முதலில் இருந்தார். அதில் இருந்து பிரிந்து வந்த கட்சி தான் மகிந்த ராஜபக்சவின் SLPP. இந்த கட்சியில் சமன் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சந்திர தூதர் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என அண்ணன் தம்பி அனைவரும் இருந்தார்கள். தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார்.நாமல் ராஜபக்ச எதிர்பார்த்த அளிவிற்கு வாக்குகளை பெறவில்லை. அவர் ஒரு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார் எனலாம். ஒரு முக்கியமான குடும்பத்தில் அனைத்து ராஜபக்சர்களின் பின்னணியில் வந்தார். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் காலப்பகுதியில் வந்த பெரும் போராட்டத்தில் ராஜபக்சர்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய மீளெழுச்சிக்கு இடமில்லை என இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது. ஏற்கனவே 2015 இல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சர்கள் 2019 ஆம் ஆண்டில் மீளெழுச்சி பெற்றார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்கால தலைமுறைக்கு இந்த மீளெழுச்சி கிடையாது என்ற வலிமையான செய்தியை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் அவர் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச நன்றிகளை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.கடந்த எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 6.9 மில்லியன் மக்களின் ஆணையினால் ஜனாதிபதி பதவி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அபிவிருத்தியடைந்த நாடு என்ற தொலைநோக்குப் பார்வை நனவாகும் போது பொதுஜன பெரமுனவின் பலத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். ஒரளவு வெற்றிகளை பதிவு செய்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தனது முயற்சிகள் சேறுபூசுதல் மற்றும் வெற்று வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாரேனும் தங்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினால், அதில் இருந்து பாடம் கற்று மீண்டும் சவாலுக்கு முகங்கொடுக்க முழுமையாக தயாராகுவேன் எனவும் நாமல் ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.