Wolf Attacks CM Yogi Adityanath Issues Shoot at Sight Order, மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்களை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை

  மாலை மலர்
Wolf Attacks CM Yogi Adityanath Issues Shoot at Sight Order, மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபடும் ஓநாய்களை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை

லக்னோ:உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை