வந்தாச்சி புது பிக்பாஸ் - 8வது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி

  தினத்தந்தி
வந்தாச்சி புது பிக்பாஸ்  8வது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி

சென்னை,உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார்.தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து, கமல்ஹாசனுக்கு பதில் யார் பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் 8வது சீசனின் டீசரரை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளனர். முதல் முறையாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால் பிக் பாஸ் 8வது சீசன் மீதான எதிர்பார்பபு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.Bigg Boss Tamil Season 8 Teaser Vandhaachu Pudhu Bigg Boss #BB8Streaming24x7 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #Disneyplushotstartamil #VijayTV pic.twitter.com/oGEK6JkGlQ

மூலக்கதை