கடைசி 5 வருடத்தில் முதல் முறை: டாப் 10-ல் இருந்து வெளியேறிய பாபர் அசாம்/ Babar Azam out of the Top 10 ICC Test Ranking for the first time in 5 years.
ராவல்பிண்டி:பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.இந்த தொடரில் மோசமாக விளையாடிய பாபர் அசாம், 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 10-ல் இருந்து பாபர் அசாம் வெளியேறி 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவர் டெஸ்ட்டில் 50-க்கு மேற்பட்ட ரன்களை கடைசியாக 2022-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.