டிராவிஸ் ஹெட் அதிரடி.. 154 ரன்கள் இலக்கை 9.4 ஓவரில் எட்டிய ஆஸ்திரேலியா/ Australia won by 7 wkts against Scotland
ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்- டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய டி20 அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அறிமுகமானார். அவர் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஸ் 12 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட் 25 பந்தில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஸ் - ஸ்டோய்னிஸ் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.