Minister Udayanidhi Congratulate director Mari selvaraj- இயக்குனர் மாரி செல்வராஜை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

  மாலை மலர்
Minister Udayanidhi Congratulate director Mari selvaraj இயக்குனர் மாரி செல்வராஜை வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் @mari_selvaraj சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின்… pic.twitter.com/87r6j753iuஇதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு @Udhaystalin சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக்… pic.twitter.com/rABkQ2rI8Pஅந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.

மூலக்கதை