Boko Haram attack on village leaves 81 dead in Nigeria/போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலி
அபுஜா :ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமாகினர் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.