Union Health Secretary ApurvaChandra writes a letter to all states and UTs/டாக்டர்களின் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

  மாலை மலர்
Union Health Secretary ApurvaChandra writes a letter to all states and UTs/டாக்டர்களின் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி:மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நோயாளிகள் பொதுமக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த வேண்டும். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.மருத்துவமனைகள், அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவுவதோடு அவை முறையாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.சி.சி.டி.வி. காட்சிகளை உள்ளூர் காவல்துறையிடம் விரைவாக பகிரும் வகையில் வழிமுறையை வகுக்கவேண்டும்.இந்த நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை