When do we go cycling in Chennai? - MK Stalin answer to Rahul / நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது? - ராகுல் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

  மாலை மலர்
When do we go cycling in Chennai?  MK Stalin answer to Rahul / நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?  ராகுல் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.Evening's calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLqஇந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "பிரதர்.. நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது?" என்று பதிவிட்டுள்ளார்.Brother, when are we cycling together in Chennai? ? https://t.co/fM20QaA06wராகுல் காந்தியின் பதிவை பகிர்ந்து அவரது கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அவரது பதிவில், "அன்புக்குரிய சகோதரரே.. எப்போது நேரம் கிடைக்கிறதோ, சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம்.ஏற்கனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும், என் வீட்டில் தென்னிந்திய மதிய உணவை, ஸ்வீட் உடன் ருசிக்கலாம்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Dear brother @RahulGandhi, whenever you're free, let's ride and explore the heart of Chennai together! ?A box of sweets is still pending from my side. After our cycling, let's enjoy a delicious South Indian lunch with sweets at my home. https://t.co/X0Ihre6xpo

மூலக்கதை