தவறான வாக்குறுதியால் நாட்டின் நிலை மோசமடையும் - சவால் விட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! - லங்காசிறி நியூஸ்
பிடகோட்டே சிறிகொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித்துக்கும் அநுரவுக்கும் பகிரங்கமான முறையில் சவால் விட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) திறந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளார்.இதன் மூலம் ஒட்டுமொத்த தேசமும் தங்களது பகிரங்க வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை மதிப்பிட முடியும் என கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது சாத்தியமற்றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பிரேமதாச மற்றும் திசாநாயக்கவின் "தவறான வாக்குறுதிகள்" குறைக்கப்பட்ட விலைகள் மற்றும் வரிகள் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்யும் வகையில், அத்தகைய மாற்றங்கள் மற்றொரு பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற ஏமாற்று வேலைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.பொருட்களின் விலைகளை குறைக்கவும் வரிகளை குறைக்கவும் விரும்புகின்ற அதேவேளை, ரூபாவை பலப்படுத்துவதன் மூலமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் மட்டுமே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உடனடியாக மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் போது அவர்களின் கருத்தை பரிமாற்ற வேண்டும் என கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இந்த விசேட மாநாட்டில் கலந்துகொண்டனர்.எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அவரது வேட்புமனுவை அவர்கள், இலங்கையை அபிவிருத்தியை நோக்கி முன்னேற்றும் நோக்குடன், சுயேட்சையாக ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.